ஏழைகள்

நித்தமும் ஒரு போராட்டம்

யுத்தமாய் வாழ்வே ஆனதினால்
கண்களில் நீரோட்டம்

சத்தமும் எங்களை மதிப்பதில்லை
சத்தியமும் இங்கே ஜெயிப்பதில்லை

சமத்துவம் என்பது பொய்யின் எல்லை
தனித்துவம் எங்களுக்கு இல்லவே
இல்லை

தத்துவம் பேசுவோர் வாய் கிழிய
அவர் மகத்துவம் ஊரோர்க்கு தெரிவித்திட
எங்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை

மௌனமே எங்கள் தனி மொழியாகிட
வார்த்தைகள் எல்லாமே எங்களுக்கு
அன்னியமாகிட

நாங்கள் ஏழைகள், செல்வந்தர் எங்கள்
ரத்தத்தை உறிஞ்சிடும் அட்டைகள்

அவர்களின் ஏவல்கள் எங்களுக்கு
வேதங்கள்

அதை மீறினால் இழந்திடுவோம்
வாழ்வுகள்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (25-Jun-14, 2:56 pm)
Tanglish : elaikal
பார்வை : 166

மேலே