பச்சை பொய்களின் சாயம் வெளுக்கும்----அஹமது அலி----

பாசிசத்தின் பகட்டான
பச்சைப் பொய்களுக்கு
பட்டுச் சரிகை நெய்து வந்தாலும்
ஆண்டிக் கோவணத்துக்கும்
அது தகுதி பெறாது.....!
.............
கிழவிக்கு அலங்காரமிட்டு
மணமேடையேற்றினாலும்
முதலிரவில் சாயம் வெளுக்கும்
பொய்முகம் தானே கருக்கும்..!
.........
பொய்யால் திரி திரித்து
நெய்யாய் உருகினாலும்
ஒளிரும் விளக்கு இழுக்கு
அவ்வொளியே வேண்டாம் விலக்கு!
.......
வரலாற்றை புரட்டி புரட்டி
புரட்டாற்றில் மூழ்கடிக்க நினைத்தால்
வரலாறே வாலொடிக்கும்
புரட்டு வாயையும் சேர்த்துடைக்கும்..!
..............
குரங்கு வித்தை காட்டவந்து
பூனை வித்தை காட்டி நின்றால்
கூட்டம் கூடி வேடிக்கை பார்க்கும்
ஆட்டம் முடிந்து வேடிக்கை காட்டும்..!

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (25-Jun-14, 5:14 pm)
பார்வை : 202

மேலே