என் உயிராக உன்னை நேசிப்பேன் 555
என் உயிரே...
நான் கதிரவனை
நேசிக்கிறேன்...
உன் நிழலோடு
என் நிழல்
காதல் செய்வதால்...
இரவை நேசிக்கிறேன்...
என் கனவினில்
உன்னுடன் பேசுவதால்...
நிலவை நேசிக்கிறேன்...
வான் நிலா
உன் முகம் காட்டுவதால்...
காற்றை நேசிக்கிறேன்...
உன் சுவாச காற்று என்
மூச்சோடு கலப்பதால்...
நெருப்பை நேசிக்கிறேன்...
காதல் சொல்ல
வரும்போதெல்லாம்...
உன் சுட்டெரிக்கும்
பார்வையாய் சுடுவதால்...
மலர்களை நேசிக்கிறேன்...
உன் கூந்தலில் ஏறி
மண்ணில் விழுவதால்...
என்னையும் நேசிக்கிறேன்...
உன் இதயம்
என்னிடத்தில் துடிபதால்...
காதலையும் நேசிக்கிறேன்...
என்றாவது என் காதலை
நீ உணர்வாய் என்பதால்...
உன்னையும் நேசிக்கிறேன்...
நீ என்னை
நேசிகாவிடாலும்...
என்றும் நான்
உன்னை நேசிப்பேன்...
என் உயிராக.....