மன அலைகள் ஓய்வதில்லை ஒரு நொடியுமே
கடல் அலைகள் எப்பொழுதேனும் ஓய்வதுண்டு
மன அலைகள் ஓய்வதில்லை ஒரு நொடியுமே
எண்ணங்கள் ஒவ்வொன்றாய் தோன்றி, தோன்றி
அதன் பாட்டிலே,
அமைதி குலைத்திடும் போகும் போக்கிலே,
ஒவ்வொன்றும் ஒரு திசையில் மனதினை
கொண்டு செல்லுமே
ஓர் நினைவில் மனதை சஞ்சரிக்க அது
விடுவதில்லையே, சங்கிலி தொடராய், ஒன்றின்
பின், ஒன்று
அதறிக்கில்லை என்றும் ஓய்வு
எவன் ஒருவன் எண்ணங்களை கட்டு
படுத்திடுவானோ, அவன் அமைதியின்
பாதையிலே அடி எடுத்து வைக்கின்றான்
அமைதிக்கு மட்டும் அவன் அனுமதி
தந்திடுவான் தன் மனதிலே
கொந்தளிப்பை தூர தள்ளிடுவான் தன்னை
விட்டு தொலைவிலே
அவன் தானே ஞானி என அழைக்கபடுவான்
அந்த ஞானத்தை பெற்று விட்டால்
வாழ்ந்திடலாம், மன நிம்மதியுடனே

