உடைகிறேன்

பெண்ணே

நீ முறிக்கும் சோம்பலில்
நான் உடைந்து போகிறேன்

நீ தலை வாரினால்
நான் கலைந்து போகிறேன்

நீ உடை திருத்தையில்
நான் பிழை ஆகிறேன்

நீ கோலம் போடுகையில்
நான் புள்ளி ஆகிறேன்

நீ உதடு சுழித்து சிரிக்கையில்
அந்த சுழலில் சிக்கி
தொலைந்துவிட்டேன்

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (26-Jun-14, 10:10 am)
பார்வை : 67

மேலே