வியாபாரம்

க..த்..தி...ரீ...க்...கா...
முருங்க...க்...கா...
பாவ...க்...கா...
பீ...க்...கங்...கா
வெங்கா...ய...ம்...
எங்கள் காலத்தில்
இப்படித் தான்
கூவினார்கள்
தெருவில்
காய்கறி விற்பனைக்காக...
இப்போதும்
கூவுகிறார்கள்
தொலைக் காட்சிகளில்
இ..ஞ்...சி...னி...ரி...ங்...க்
கே...ட்...ட...ரி...ங்...க்...
பி...பி...ஏ...
எம்...பி...ஏ...
கல்வி விற்பனைக்கு