காலத்தின் கோலங்கள் மாறிடும்

​உய்த்திட்ட உலகிலே உயிர்வாழ
நிலைத்திட எவருக்கும் வழியுண்டு !
முளைத்திடும் விதையும் பாறையிலே
துளைத்திடும் வேரும் நிலைத்திடவே !

தடாகத்தில் தனித்தே நிற்கிறது
தளராத நெஞ்சுடன் வளர்கிறது !
கிட்டிய இடத்தை பற்றிவிட்டது
ஈட்டிய இன்பத்தை சுமக்கிறது !

நிஜத்தின் அருமையும் அழகும்
நிழலில் தெளிவாய் தெரிகிறது !
தனித்து நின்றாலும் மிளிர்கிறது
தன்மை குன்றாமல் ஒளிர்கிறது !

எச்சத்தின் மிச்சமே செடியானது
எழில்மிகு தோற்றம் உருவானது !
எதற்குமே வழியும் உண்டென்று
எவரும் அறிந்திடவே தருவானது !

பாதை அறிந்திட்டு பயணியுங்கள்
இலக்கை அடைந்து இன்புறுங்கள் !
காலத்தின் கோலங்கள் மாறிடும்
ஞாலமும் நம்கையில் வந்திடும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Jun-14, 3:40 pm)
பார்வை : 250

சிறந்த கவிதைகள்

மேலே