+++எழுத்திலே பிரிவினை வாதிகள்+++நாகூர் லெத்தீப்

பணத்திற்காக
மதத்தை அடகு
வைக்கும் துரோகிகள்
பாவிகளே.........!
வன்முறையை
தூண்டிவிடும்
வார்த்தைகள்
சாட்டைகளே..........!
மனிதனை
மனித இனம் பிரித்து
பார்ப்பது
மூடத்தனமே.........!
வேற்று கிரக
வாசிகள்
பூமியில் அவதரித்த
மனித ஜாதிகள்.......!
மனித இனத்தை
மனிதனே
மதிக்காமல் வாழ்வதா
கொடுமையே.........!
மனித நேயம்
ஒடுக்குமே
மனித பிரிவினையின்
தோற்றமே.........!
ஒன்றாக வளர்ந்த
சுதந்திரம்
இனப்பிரிவை கண்டு
தலைகுனிகிறதே......!
நிலையற்ற
மண்ணை எனது என
சொல்லும்
நிலையற்ற
உயிர் மானிடனே.......!
ஒன்று படுவோம்
இணைந்து நிற்ப்போம்
பிரிவினை வாதிகளை
விரட்டுவோம்.........!