பா குணசேகரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பா குணசேகரன் |
இடம் | : தஞ்சாவூர் - தமிழ்நாடு - INDIA |
பிறந்த தேதி | : 21-Jun-1964 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 429 |
புள்ளி | : 22 |
* தமிழை
* கவிதையை
* இயற்கையை
* இனிய நண்பர்களை நேசிப்பவன் !
பிறந்தது மன்னார்குடி அருகில் சித்தமல்லி எனும் சிற்றூர்
வளர்ந்தது தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் பள்ளிகொண்டான் எனும் சிற்றூர்
தற்போது வாழ்வது, தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை சிற்றூரில்...
இளம் வயது கனவுகாலங்களின் போது
இயற்கையும் அழகும்,
சமூக அவலங்களும்
ஏழ்மையும் வன்செயல்களும்
மனதை சலனப்படுத்திய தருணங்களை
கவிதைகளாய் வார்த்தெடுத்திட்ட நாட்கள் திரும்ப வாராதன.
கவிஞனாய் பிறத்தல் அரிது. உணர்ந்தவற்றை கவிதையாய் படைப்பதில் ஆர்வம் அமைவதும் அரிதானதே.
அரசு அலுவலராய் இருந்து கொண்டு, கிடைக்கின்ற சிறிய காலவெளிகளில் கவிதைகளோடு கருத்தொன்றி வருகிறேன்.
இளமை போய் முதுமை எட்டிப் பார்க்கும் இத்தருணத்தில் என் கவிதைகளை இணைய உலகில் அரங்கேற்ற தளம் தந்த எழுத்து.காம் எனக்கொரு வரம்.
எழுத்து.காம் இணையதளத்திற்கும், என்னை பாராட்டி ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என்றென்றும் நன்றிகள்.
தமிழும்
கவிதையும்
இயற்கையும் அழகும் உலகும்
இனிமையும் வாழ்வும் வளமும் வெற்றியும்
வேறன்றி யாது வேண்டும் நம் யாவருக்கும் இப்பூவுலகில்?
உங்கள்...
கவிஞன் பா.குணசேகரன்
காற்றுடன் நான் சங்கமிக்கும்
ஒரு கடற் கரை வாசம்
கற்பனைகள் உருவெடுத்து
துடுப்பில்லா ஆழ்கடல் பயணத்தில்
வானமும் கடல் நீரும் மட்டுமே
எங்கெங்கும்
உயிர் ஊர் திரும்புமா
பயமும் பதட்டமும் கலந்த கவலைகள்
அந்நிய நாட்டு துப்பாக்கிக் குண்டுகளும்
காற்றில் கலந்து வரும் அவ்வப்போது
என் படகு கவிழ்க்கப்படும்
வலைகள் அறுக்கப்படும்
சில சமயம் மீன்களோடு
நானும் மிதிக்கப்படுவேன்
சில தருணங்களில் சாகடிக்கப்படவும் கூடும்
பிழைக்க ஊக்கம் மட்டும் வேண்டும்
ஆனால், எனக்கோ
உயிர் துறக்க துனிவும் வேண்டும்
கண்ணீர் முட்டிக் கொண்டு
வருகிறது
என் கற்பனையே இத்தனை திகிலா?
தினம் தினம்
இங்கே இப்படித் தான
காற்றுடன் நான் சங்கமிக்கும்
ஒரு கடற் கரை வாசம்
கற்பனைகள் உருவெடுத்து
துடுப்பில்லா ஆழ்கடல் பயணத்தில்
வானமும் கடல் நீரும் மட்டுமே
எங்கெங்கும்
உயிர் ஊர் திரும்புமா
பயமும் பதட்டமும் கலந்த கவலைகள்
அந்நிய நாட்டு துப்பாக்கிக் குண்டுகளும்
காற்றில் கலந்து வரும் அவ்வப்போது
என் படகு கவிழ்க்கப்படும்
வலைகள் அறுக்கப்படும்
சில சமயம் மீன்களோடு
நானும் மிதிக்கப்படுவேன்
சில தருணங்களில் சாகடிக்கப்படவும் கூடும்
பிழைக்க ஊக்கம் மட்டும் வேண்டும்
ஆனால், எனக்கோ
உயிர் துறக்க துனிவும் வேண்டும்
கண்ணீர் முட்டிக் கொண்டு
வருகிறது
என் கற்பனையே இத்தனை திகிலா?
தினம் தினம்
இங்கே இப்படித் தான
அப்பா
ஒரு மொடாக் குடிகாரர்
தினம் தினம்
சாராயமோ கள்ளோ
மதுக்கஷாயம் எனும் விஷம் கலந்த கன்றாவியோ
நள்ளிரவில்
தள்ளாடித் தள்ளாடி வரும்
அப்பாவுக்கு சுடுசாதம் போட
எத்தனிக்கும் என் அம்மாவின்
பரிதவிப்பை பாசம் என்பதோ, பயம் என்பதோ?
அப்போதும் தொட்டுக் கொள்ள
உணக்கையாயில்லை
என அடித்து உதைத்து
என்னையும்
என் ஒன்றரை வயது தம்பியையும் மிரளச் செய்து
சிதறடிப்பார் அப்பா
என்னை பக்கத்து வீட்டு
மீசை மாமா மாரியப்பனும்
தம்பியை எதிர் வீட்டு அரிசிக் கார அம்மாவும்
தஞ்சம் தந்து ஆதரிப்பார்கள்
அம்மா
கிணற்றடி தண்ணீர் தொட்டிக்குப் பின்னால்
ஒளிந்து இரவைக் கடப்பாள்...
தீபாவளி பொங்கல் நாட்களில்
விடிந்த
வயது முப்பதை தாண்டும் போது, அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரை விழுந்த போது மனதில் கவலையும் விழுந்தது. நண்பர்களோ இது கவலை நரை என்றார்கள். வேறு சிலரோ இது இளநரை என்றார்கள். மனைவியோ இது இயற்கை, நரை வந்தால் முதிர்வு ஆரம்பமாகிறது என்றாள்.
ஆனால், எனக்கு கவலை என் நரை தான். ஐந்தாறு ஆண்டுகளிலேயே நரையானது தரையில் கொட்டிய எண்ணெய் மாதிரி தலை முழுவதும் பரவியது.
நண்பர்கள் ஆலோசனையின் பேரில் கருஞ்சாயம் பூசினேன். எல்லோரும் டக்கரா இருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால், எனக்கு அலர்ஜி வந்து கண்களை பதம் பார்த்தது.
தலையெல்லாம் சொறி மாதிரி அரித்தது. மேலதிகாரி என்னிடம் கேட்கும் நன்றாக பதில் தெரிந்த கேள்விக்கெல்
எனக்குள் புதைந்தவனை தேடுகிறேன்
மூட்டை கட்டி போட்ட
கனவுப்பைகளிலும்
காணாமல் போன
என்
நினைவுச் சுமைகளிலும்
இருப்பேனோ என்று ...
செதுக்கிய சிலைக்கு
கண் வைக்க
மறந்தேனோ என்று
இருண்ட வெளியில்
எனைத் தேடுகிறேன்
காலச்சுவடுகளிலும்
கடினப்பதிவுகளிலும்
கரைந்து போன
மையின் வெளிர் நிறத்தினூடே
புதைந்து போன எனைத்
தேடுகிறேன் !
என் விழிகளிலும் இருதயத்திலும்
காலத்தின் கத்தி கொண்டு
கீறிக்கொண்ட பின்பும்...
உயிரற்ற என்
ரத்த பிரவாகத்தில்
மிதந்து
சிதைந்த பின்பும்
என்னை புதுப்பிக்கவே
தேடுகிறேன் !
வானாந்திரம் எது
பள்ளத்தாக்கு எது
என்று
அறிந்திட இயலா
அற
காற்றாய் வியாபிக்கிறாய் !
கனவுகளோடு
கலந்து வருகிறாய் !
மின்னல் கீற்றாய்
அவ்வப்போது மிளிர்கிறாய் !
சில பொழுதில்
மலையாய் பிரமிக்கிறாய் !
சில சமயம்
சிந்தைக்குள்
மருந்தாய் கசக்கிறாய் !
சில கணம்
சுவாசத்தினுள்
இனிப்பாய் இருக்கிறாய் !
பகற்பொழுதினில்
பனி போல் தழைகிறாய் !
மாலையாய் கழுத்தினிற்
விழுகிறாய் !
அமுதமாய் பூரிக்கிறாய் !
சிறகடித்து சிலிர்க்கிறாய் !
ஆனாலும்..
எங்கோ போய் விடுகிறாய்...
அந்நியமாய்...
அவ்வப்போது...
மீண்டும் வருவேன் என்ற
உணர்த்துதல்களோடு... !
படம் :- என் முகநூல் நண்பர்... திருமிகு. .சுருளிப்பட்டி சிவாஜி அவர்கள்
---------------------------------------------------------------------------------------------------------
கடை போட்டாயிற்று
அஞ்சுக்கும் பத்துக்கும் பிசுவும் பாவிமக்களை பார்த்தாகனும்...
கிள்ளிப் பார்த்து, நசுக்கிப் பார்த்து
அமுக்கிப் பார்த்து உடைத்துப் பார்த்து வெறும் பத்தஞ்சுக்கு
காய் வாங்கும் கயவர்களை சமாளிக்கனும்...
நூறுக்கே போணியாக தட்டுத் தடுமாறும் சமயம்
கறாராய் வந்து நிற்கும் கந்து வட்டிக்காரனை
அச்சுப்பிச்சுப் போட்டு அனுப்பனும்...
மதியம் எனக்கு இருக்கு தண்ணி சோறும் பச்சை மிளகாயும்… நான் சாப்பிட்டுரு
படம் :- என் முகநூல் நண்பர்... திருமிகு. .சுருளிப்பட்டி சிவாஜி அவர்கள்
---------------------------------------------------------------------------------------------------------
கடை போட்டாயிற்று
அஞ்சுக்கும் பத்துக்கும் பிசுவும் பாவிமக்களை பார்த்தாகனும்...
கிள்ளிப் பார்த்து, நசுக்கிப் பார்த்து
அமுக்கிப் பார்த்து உடைத்துப் பார்த்து வெறும் பத்தஞ்சுக்கு
காய் வாங்கும் கயவர்களை சமாளிக்கனும்...
நூறுக்கே போணியாக தட்டுத் தடுமாறும் சமயம்
கறாராய் வந்து நிற்கும் கந்து வட்டிக்காரனை
அச்சுப்பிச்சுப் போட்டு அனுப்பனும்...
மதியம் எனக்கு இருக்கு தண்ணி சோறும் பச்சை மிளகாயும்… நான் சாப்பிட்டுரு
மனித வாசனை இல்லாத பூமி
உயிர்கள் சுவாசிக்காத காற்று
அளந்தறியா நிலையில் அண்ட வெளி
உலகெங்கும் ஒளி இழந்து
நிர்மூலமான நகரங்கள்
வானெங்கும் அணுச் சிதறல்கள்
சிறகுகள் ஒடிந்த பறவைகள்
அலறிப் புடைதோடும் ஆன்மாக்கள்
எங்கெங்கும் மரணம் சுமந்த
மௌனங்கள்
சில்லுகளாய் சிதைந்திட்ட
சித்திரங்கள்
ஆனாலும்...
ஓய்ந்திடவில்லை இப்பூமியில் இன்னமும்
துப்பாக்கிச் சீற்றங்கள்
பீரங்கி முழக்கங்கள்
வெடிகுண்டுச் சிதறல்கள்
மயானம்...
உலக மயமாயிற்று
நண்பர்கள் (14)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

துளசி
இலங்கை (ஈழத்தமிழ் )

ஜெபகீர்த்தனா
இலங்கை (ஈழத்தமிழ் )
