அந்நியமாய் மீண்டும் வருக

காற்றாய் வியாபிக்கிறாய் !

கனவுகளோடு
கலந்து வருகிறாய் !

மின்னல் கீற்றாய்
அவ்வப்போது மிளிர்கிறாய் !

சில பொழுதில்
மலையாய் பிரமிக்கிறாய் !

சில சமயம்
சிந்தைக்குள்
மருந்தாய் கசக்கிறாய் !

சில கணம்
சுவாசத்தினுள்
இனிப்பாய் இருக்கிறாய் !

பகற்பொழுதினில்
பனி போல் தழைகிறாய் !

மாலையாய் கழுத்தினிற்
விழுகிறாய் !

அமுதமாய் பூரிக்கிறாய் !

சிறகடித்து சிலிர்க்கிறாய் !

ஆனாலும்..

எங்கோ போய் விடுகிறாய்...
அந்நியமாய்...

அவ்வப்போது...
மீண்டும் வருவேன் என்ற
உணர்த்துதல்களோடு... !

எழுதியவர் : பா.குணசேகரன் (27-Jun-14, 7:43 pm)
சேர்த்தது : பா குணசேகரன்
பார்வை : 96

சிறந்த கவிதைகள்

மேலே