சிறுகல் சிகரம்

எனக்குள் புதைந்தவனை தேடுகிறேன்
மூட்டை கட்டி போட்ட
கனவுப்பைகளிலும்
காணாமல் போன
என்
நினைவுச் சுமைகளிலும்
இருப்பேனோ என்று ...

செதுக்கிய சிலைக்கு
கண் வைக்க
மறந்தேனோ என்று
இருண்ட வெளியில்
எனைத் தேடுகிறேன்

காலச்சுவடுகளிலும்
கடினப்பதிவுகளிலும்
கரைந்து போன
மையின் வெளிர் நிறத்தினூடே
புதைந்து போன எனைத்
தேடுகிறேன் !

என் விழிகளிலும் இருதயத்திலும்
காலத்தின் கத்தி கொண்டு
கீறிக்கொண்ட பின்பும்...

உயிரற்ற என்
ரத்த பிரவாகத்தில்
மிதந்து
சிதைந்த பின்பும்
என்னை புதுப்பிக்கவே
தேடுகிறேன் !

வானாந்திரம் எது
பள்ளத்தாக்கு எது
என்று
அறிந்திட இயலா
அறிவுக்குள் மாய்ந்த என்னை
எங்கோ
வெற்றிடத்தின் விளிம்பில்
தேடிகொண்டிருக்கிறேன் !

வெளிச்சம் கூட
இருண்ட வகையென்று ஓர் அகராதியே
எழுதி வைத்திருக்கும்
எனக்குள்
தேடுகிறேன் !

தேடித்தேடி
நானே எனக்கு
கிடைத்த பின்

தெரிந்து கொண்டேன்
என்னுள் விளைந்திருக்கும்
தின்மைக்குள்
பொதிந்திருக்கும் சக்தியை !

தேடல் சுவடிக்குள்
எனக்கான காலத்தை தேடினேன் ...
அது தான்
இந்த
என் நிகழ் காலம் !
இந்த நிகழ்வே நித்தியம் !

ஆதலினால்
தேடல் என்பதும் சுகம்

சிறு கல்லாய்
இருப்பினும்
வான் தொடும் வரையிலும்...

எழுவேன்...சிகரமாய்... !

எழுதியவர் : பா.குணசேகரன் (5-Jul-14, 1:10 pm)
சேர்த்தது : பா குணசேகரன்
பார்வை : 117

மேலே