உலக மயமாக்கல்
மனித வாசனை இல்லாத பூமி
உயிர்கள் சுவாசிக்காத காற்று
அளந்தறியா நிலையில் அண்ட வெளி
உலகெங்கும் ஒளி இழந்து
நிர்மூலமான நகரங்கள்
வானெங்கும் அணுச் சிதறல்கள்
சிறகுகள் ஒடிந்த பறவைகள்
அலறிப் புடைதோடும் ஆன்மாக்கள்
எங்கெங்கும் மரணம் சுமந்த
மௌனங்கள்
சில்லுகளாய் சிதைந்திட்ட
சித்திரங்கள்
ஆனாலும்...
ஓய்ந்திடவில்லை இப்பூமியில் இன்னமும்
துப்பாக்கிச் சீற்றங்கள்
பீரங்கி முழக்கங்கள்
வெடிகுண்டுச் சிதறல்கள்
மயானம்...
உலக மயமாயிற்று
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
