சுவாசித்திட கொஞ்சம் காற்றும் நிறைய குண்டுகளும்

சுவாசித்திட கொஞ்சம் காற்றும் நிறைய குண்டுகளும்

காற்றுடன் நான் சங்கமிக்கும்
ஒரு கடற் கரை வாசம்

கற்பனைகள் உருவெடுத்து
துடுப்பில்லா ஆழ்கடல் பயணத்தில்

வானமும் கடல் நீரும் மட்டுமே
எங்கெங்கும்

உயிர் ஊர் திரும்புமா
பயமும் பதட்டமும் கலந்த கவலைகள்

அந்நிய நாட்டு துப்பாக்கிக் குண்டுகளும்
காற்றில் கலந்து வரும் அவ்வப்போது

என் படகு கவிழ்க்கப்படும்
வலைகள் அறுக்கப்படும்
சில சமயம் மீன்களோடு
நானும் மிதிக்கப்படுவேன்
சில தருணங்களில் சாகடிக்கப்படவும் கூடும்

பிழைக்க ஊக்கம் மட்டும் வேண்டும்
ஆனால், எனக்கோ
உயிர் துறக்க துனிவும் வேண்டும்
கண்ணீர் முட்டிக் கொண்டு
வருகிறது

என் கற்பனையே இத்தனை திகிலா?

தினம் தினம்
இங்கே இப்படித் தான்
நிஜத்தில்

என் தோழன்
வதைபடுகிறான்...
நடுக்கடலில்

எங்கள் நாட்டில் எல்லாம் உண்டு
கடற்படை
விமானப் படை
முதல்வர்கள்
பிரதமர் ராணுவ மந்திரி தளபதிகள்
எங்கள் நாடு
வல்லரசாகும் நாள் கூட வரப்போகிறதாம்

ஆனாலும்
வயிற்றுப் பிழைப்புக்காக

கடலுக்குள் செல்லும்

என் தோழன்

காற்றோடு சேர்த்து சுவாசிக்கிறான்
மாற்றானின்
துப்பாக்கிக் குண்டுகளையும்

எழுதியவர் : பா.குணசேகரன் (31-Jul-14, 2:25 pm)
பார்வை : 83

மேலே