பெண்களின் கண்ணீர் அழகுதான்..!!!!!

பெண்ணே...!!!

நீ கண்ணீரின் மறைமுக மழலையோ.!
சட்டென வந்து விடுகிறது உனக்கு
கண்ணீர்.. அழகுதான் உனக்கு
கண்ணீர் துளிகள் ..!!!


அண்ணன் சுள்ளென கொட்ட
சட்டென வந்துவிடுகிறது கண்ணீர்
அழகுதான் உனக்கு கண்ணீர்


அன்னையின் வழக்கமான் திட்டுகள்
சுள்ளென்ற ஒரு வார்த்தையில்.,
சட்டென வந்து விடுகிறது கண்ணீர்
அழகுதான் உனக்கு கண்ணீர்..!!


தந்தையின் என்றோ ஒரு நாள்
ஊற்றெடுக்கும் அன்பின் அரவணைப்பில்
சட்டென வந்து விடுகிறது கண்ணீர்
அழகுதான் உனக்கு கண்ணீர்..!!


சக தோழியிடம் சின்ன சண்டை, பிரிவில்
சட்டென வந்து விடுகிறது கண்ணீர்
அழகுதான் உனக்கு கண்ணீர்..!!


படுக்கை அரை தனிமையில்
ஏதோ மனதை கிள்ளி காயம் செய்யா
சட்டென தலையணை நனைக்கும்
உந்தன் கண்ணீர்
அழகுதான் உனக்கு கண்ணீர்..!!


காதலன் மனதை புண்படுத்த..!!
வருவோர், போவோர் பலர் இருக்கும்
பேருந்து நிறுத்தம்., உனக்குமட்டும்
யாருமற்ற சோலையாய் மாற
சட்டென வந்து விடுகிறது கண்ணீர்
அழகுதான் உனக்கு கண்ணீர்..!!


இதுவரை அடிக்காத கணவன்
முதல் முறை பரிசளிக்க புரியாமல்
சட்டென வந்து விடுகிறது கண்ணீர்
அழகுதான் உனக்கு கண்ணீர்..!!


பெண்ணே..!!!!
எனக்கு இன்னும் புரியவில்லை
உந்தன் கண்ணீர் துளிகள்
கோபத்தின் வெளிபாடா..??
வருத்தத்தின் ஊற்றுப்படுக்கையா..??


பெண்களின் கண்ணீர் துளி..!!
விலை மதிப்பில்லா காவியம்
மங்கையரே..!! உங்கள்
கண்ணீர் துளிகள் நிலத்தில் விழுந்து
ஊற்றெடுத்து ஒன்று சேர்ந்து உருவானதோ
வைரமாக..!!!


அதனால்தான் என்னவோ அதன்
மதிப்பு இப்படி உள்ளதோ..??
அழகுதான் பெண்ணே உனக்கு
கண்ணீர் துளிகள்...!!!!



எழுதியவர் : இன்பா (12-Mar-11, 4:22 am)
சேர்த்தது : Inbhaa..
பார்வை : 588

மேலே