பொருத்தமில்லாத ஒரு உவமைக் கவிதை

பக்கத்திற்கு ஒன்றாய்
ஆயுத எழுத்தை தலைகீழாய்
கவிழ்த்திப்போட்டது போல்
கன்னத்தில் பருக்கள் கொண்டவளே.....
நம் காதலுக்கு
கண்திருஷ்டி பட்டுவிட்டதோ
என்று நினைக்கத் தோன்றுதடி...

உன் சாய்ந்த முக
ஒரு ஓரப்பார்வை போதுமடி....
சாகித்ய அகாதமியெல்லாம்
தேவையில்லையடி....
என் ஏக்கம் தீர்க்காதடி...

மௌனப் 'பா' வித்தகன்
பூ விற்பவனாய்
மனதுக்குள் உன் பெயரை
கூவிக் கூறினேனே...
நீ பாராமுகம் காட்டியதாலே...
தீரா சோகம் வாட்டியதாலே..

கானாவும் பாலாவும் போல்
அலுங்காமல் குலுங்காமல்
நம் இதயங்கள் இணைந்திருந்ததே...
தெலுங்கானாவைப் போல்
பிரிந்து போனாயே
என்னை விட்டு...
குலுங்கி நொறுங்கி விழும்
வசந்த மாளிகை ஆனதே என் இதயம்.

அச்சம்-மடம்-நாணம்- பயிர்ப்பு
பெண்களுக்கே உரித்தானது போல்,
தேடல்-ஊடல்-பிரிவு-சேர்தல்
காதலுக்கே உரித்தானது என்று தெரிந்தும்
இதயப் பொருத்தம் இல்லையோ
என்றிருக்கும் எல்லாக் காதலன்கள் போல்
முயற்சிக்காமல் முடங்கிப் போய்
சோகமாய் கிடக்கிறேனே...
அறிவிருந்தும்...
புத்திமதி சொல்வது யாரோ....

எழுதியவர் : (27-Jun-14, 4:01 pm)
பார்வை : 92

மேலே