மனிதம் கேட்டே மடிந்து போவோம் - இராஜ்குமார்

அழகு அன்பை
அடியோடு மிதித்து
காசெனும் கனவை
கண்ணில் வைத்து
கற்பாய் காப்போம்
சட்டை வரியிலும்
வன்முறை செய்வோம்
ஆயுதமெனும்
ஆடை ஏந்தி
அசிங்கத்தின் அரசனாவோம் ..!!
அர்த்தமுள்ள சிந்தையை
தொட்டு பார்ப்பது
சிறுமை என்போம் ...!!
தேடி வரும்
மேலைநாட்டு கழிவை
வாங்கி வளர்ப்பது
பெருமை என்போம் ..!!
வாழ்க்கை வண்ணத்தை
வரிகளில் தந்த வானவில் - இனி
வண்ணமின்றி வறண்டு போகும்
எங்கள் வாசலில் ..!!
சிலவற்றை படிப்போம்
பலவற்றை திணிப்போம்
ஏதோ ஒன்றை படைப்போம்
படைப்பின் அர்த்தம் அறியோம் .!!
விழி அறியா சாதியை
வீதிக்கு ஒன்றாய் வைத்து
வெறிக்கொண்டு வாழ்வோம் ..!
மதுவை மதிப்போம்
அரசால் வளர்ப்போம் - அதில்
உறவை ஒழிப்போம் ..!
கருணையை
கடலில் எறிவோம் ..!
கர்வத்தையே
கடன் தருவோம் ..!
நாங்கள்
மனிதம் கேட்டே
மடிந்து போவோம் ..!!