பெண் தேவதை
(என் நண்பனின் மனைவிக்குப் பிறந்த பெண் தேவதைக்கு இந்த கவிதை என் பிறந்தநாள் பரிசு)
பத்து மாதங்களாய்
பத்திரப்படுத்திய எங்கள்
பத்தரமாத்துத் தங்கமே!
புத்திரியாய்,
புத்துயிராய் பூத்தவுடன்
புன்னகைப்பாய் என்றிருந்தோம்!
பிறந்தவுடன் உன்னைப்
பிரசவித்தவள் அழுதாள் என
பிஞ்சு மனதை நீயும் பிழிந்தாயோ! பிரியமானவளே!
பாதி நிலா அதரத்தில், நீ
பார்த்திராத உலகத்தில்
பாதம் நான்காய் தவழ்வாயம்மா!
இனி,
உன் சின்ன விரல் பற்றியே,
நாங்கள் இருவரும் நடப்போம்!
நின் அழகுமுகம் சுற்றியே,
இணைந்து வாழ்வைத் தொடுப்போம்!