விடியாத ஒரு காலை

கண்ணெதிரே வந்தாய்
கலையழகில் கவர்ந்தாய்
கன்னங்கள் நெருங்கினாய்
கறையாக்க இதழ்குவித்தாய்
கனவு உடைந்தது
கண்கள் திறந்தது
கட்டில் குத்தியது
எழுந்துவிட்டேன்
என் தோட்டம் தேடி வந்தேன்
காலை கழிக்க வந்தேன்
கானகம் இரசிக்க வந்தேன்
கையிலோ வேலங்குச்சி பரித்தேன்
நெஞ்சிலோ உன்நொடிகளை சுவைத்தேன்
பின் நடந்தேன்... நடந்தேன்..
(என் தோட்டத்தில்)
சேவலும் எதிர்வீட்டில் கூவக்காணோம்
சேலையும் கோலம்போடத் தெரியக்காணோம்
செம்பகத்தின் கச்சேரியக் காணோம்
செங்காந்தல் நிறம் மாறக் காணோம்
குளத்தாமரை திறந்திட காணோம்
குளத்தேரைகள் வாய்மூடக் காணோம்
அல்லிகள் குவிந்திடக் காணோம்
மல்லிகள் விரிந்திடக் காணோம்
பனிகள் கரையக் காணோம்
புற்கள் நிமிரக் காணோம்
காட்டொறவிகள் நிருத்திடக் காணோம்
காற்றுக்கசையும் தும்பிகளைக் காணோம்
கரத்தாண்டி வெயில் தேடக்காணோம்
கறையாங்கள் மடிந்து விழக்காணோம்
அதை பொருக்க சிட்டுகளைக் காணோம்
அதட்டிப் புடுங்க அணில்களைக் காணோம்
கூகைகள் இன்னும் அடையக் காணோம்
பழந்திண்ணிகள் இன்னும் தொங்கிடக் காணோம்
வானம்பாடி வாய்சிரிக்க காணோம்
வானில் நாரைகள் அணிவகுக்க கானோம்
திரலும் காக்கையும் காணோம்
திரியும் மைனாவும் காணோம்
தேயும் நிலவும் தூங்கிடக் காணோம்
தேடி வரும் தேனியும் காணோம்
நட்சத்திரங்கள் உதிரக் காணோம்
நடுவானம் சிவக்கக் காணோம்
அடடா.... கதிரவனே முழித்திடக் காணோம்
வீடு சென்று முட்கள் பார்த்தேன்
வீழ்வன் திசையிலே பெரியோன் நின்றான்
விண்ணவன் திசையிலே சிறியோன் பார்த்தான்
விழிபூத்த நேரம் எண்ணிட சிரித்தேன்.
(இந்த கடைசி நான்கு வரிகள் “நிலைமண்டில ஆசிரியப்பா”வாக அமைந்துள்ளது, பிழை இருப்பின் சுட்டிக் காட்டவும்)