இரை மறந்த மிருகம்
அன்மையில் படித்த (அ) பார்த்த மிருகங்களின் இயல்பை உணர்த்தும் இரு விடயங்களை பகிர விரும்புகிறேன்.
முதலாவது:
இது ஒரு காணொளியாக கண்டேன், ஒரு சிறுத்தை தன் பசிக்காக பபூன் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்றை வேட்டையாடுகிறது. பின் அதை உண்பதற்காக ஒரு மரத்தின் மீது இழுத்துச் செல்கிறது. அப்போது அதன் அடிவயிற்றில் ஒரு பச்சிளம் குட்டி பயத்துடன் தொங்கிக் கொண்டிருப்பதை எதேச்சையாக பார்க்கிறது. அவ்வளவுதான் மறு கனம் உடைந்து விடுகிறது. தன் இரையை மறந்துவிட்டு அதன் அருகே சென்று, பாசம் பரிமாறுகிறது. சில கழுதைப் புலிகள் வர இது பாதுகாக்கிறது. தன் குட்டியைப்போல் வாயால் கவ்வி பாதுகாப்பான இடம் சேர்க்கிறது. பின் அதொடு விளையாடி, அதற்கு தெரிந்த வகையில் பாதுகாத்து, அதனுடையே தூங்குகிறது. அதற்கு மேல் அந்த காணொளி இல்லை. அந்த சிறுத்தையால் அந்த குரங்கை வளர்க்க முடியாது ஆனாலுல் அதன் இரைமேலும் வந்த இயல்பான அன்பு நமக்கு பிற உயிர்கள் மீது வராது.
இரண்டாவது:
இது நம் மண்ணில் எங்கோ கிராமத்தில் நடந்த செயதி. படித்தது. துள்ளி விளையாடிக்கொண்டிருந்த இரண்டு நாய்க் குட்டிகள் தவறி கேணிக்குள் விழுந்தன. அதை கண்ட தாய் ஓடி வந்து கேணியின் அருகே நின்று குரைகிறாள். அதை கேட்டி வளர்ப்பாளர் வந்து பார்க்க. அதிர்ச்சியான காட்சி. கேணிக்குள்ளே, ஒரு மணல் திட்டில் இரண்டு நாய்கள் நிக்க. பக்கத்தில் ஒரு இராஜநாகம் படம் எடுக்க நிற்க்கிறது. அது மொத்தம் 48மணி நேரத்திற்க்கு அந்த குட்டிகளை தண்ணீரில் இறங்க விடாமல் காவல் காத்து நின்றது. பின் தீ அணைப்பு படையினர் வந்து உள்ளே இறங்கையில், நாகம் மறு பக்கம் விளகிச் சென்றது. பின் குட்டிகள் மீட்கப் பட்டன. பின அந்த நாகம் காட்டிற்கு இடம் மாற்றப்பட்டது.
தங்கள் கருத்துக்களை பதியவும்