மகிழும் தவளைகள்

மகிழும் தவளைகள்….!!
*
விளையாட்டு காட்டுகிறது பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும் ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின் கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும் மீன்களுக்கு…
*
மழை நின்றபின் இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி மகிழும தவளைகள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (1-Jul-14, 3:26 pm)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 57

மேலே