பணம் பிணம் - நாகூர் லெத்தீப்

பணத்திற்கு
பின்னால் செல்லும்
மனித மிருகம்
உயிரை மதிப்பதில்லை
உலகிலே..............!

சாக்கடைகள்
எதையும் செய்வார்கள்
பிணத்தின் வாயில்
பணம் இருந்தாலும்........!

பணம் மனிதனை
பிணமாக்கும் மாய
வேலைகளை செய்கிறது
மனித வாழ்வை
கெடுக்கிறது........!

கோடிகள்
பசியை போக்கிடுமா
வறுமையை
விரட்டிடுமா........!

பணம் படைத்த
முதலை உடலை
வளர்க்கிறது
உலகை கெடுக்கிறது...........!

தீராத ஊழால்
வறுமைக்கோட்டிற்கு
வழிவகுக்கும்
இந்திய பட்ஜெட்
விரைவிலே..............!

சுரண்டல்கள்
அசிங்கங்களாய் மிலிரும்
அரசியல் வாதிகள்
கதர்வேட்டியில்
தொடரும்
ஏமாற்றங்களே..........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (2-Jul-14, 1:08 pm)
பார்வை : 116

மேலே