இடிந்து விழுந்த கட்டிடம் - நாகூர் லெத்தீப்
இடைவிடாத
வேலை எதிர்ப்பார்க்காத
மாலை மவுலிவாக்கம்
இரவை கடந்தது.............!
கொட்டும் மழை
ஒதுங்குவதற்கு இடம்
தேடும் வயோதிகள்
கட்டிடத்தில்
அருகிலே நிற்க...........!
விபத்தை
சந்திப்பதை தவிர
மக்களுக்கும்
வழியில்லை
தரம் குறைந்த கட்டிடம்
சரிந்ததால்............!
பணத்திற்காக
கட்டிய கட்டிடம்
பிணத்தை பரிசாக
பெற்றது அப்பாவி மக்களின்
உயிரை பறித்தது..........!
யாரோ செய்த
தவறுக்கு
பொதுமக்களே ஏன்
பலியாக வேண்டும் உயிர்
துறக்க வேண்டும்..........!
பொய்கதைகள்
ஜோடிப்புகள் அதிகாரிகள்
தப்பிக்க
தாரக மிந்திரமே..............!
தவறான
விமர்சனங்கள்
மாண்ட உயிருக்கு
விலை கொடுக்குமா...........!
போலியான கட்டட
அமைப்புகள்
மனித உயிரை பறிக்கும்
அற்புத படைப்புகள்..........!
யார் தட்டிக்கேட்பது
யார் தண்டனை கொடுப்பது.....?
இடிபாடுகள் எதிர்பாரா
மரணத்தை சம்பவிக்கும்
சகதிகள் நசுக்கல்கள்..........!
சென்னை அருகே மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 நாட்களுக்கு பின் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் பலி எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.