பெண்ணா பிறந்தவள் நான்

விட்டதெல்லாம் சாபமென்றாய்
தொட்டதெல்லாம் பாவமென்றாய்
ஒரு மூலையில் நானும் குந்த
அடி மகளே உன்னால்
பஞ்சமென்றாய்

ஐந்து வயது வரை
அரவணைத்தாய்
பத்து வயது வரை
ஆசீர்வதித்தாய்
ஆளான நாள் முதலாய்
என்னை நீ முடுமை என்றாய்

காலம் செய்த பாவம் அது
பத்து வயதில் ஆளானேன்
காசு பணம் அற்ற வீட்டில்
நானும் ஒரு குமரானேன்

பூப்பெய்த காலமுதல்
கண்ணீருக்கு சொந்தமானேன்
கண்ணீர் வற்றி போனாலும்
கடுஞ்சொல்லுக்கு வாக்குப்பட்டேன்

எத்தனை நாள்தானோ
இப்படி வதையாவேன்
இன்பமாய் ஒரு வாழ்வு
எனக்கு இல்லையென்றால்
இறைவா இன்றே கூறிவிடு
மண்ணுக்கு நான் இரையாவேன் .......

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (2-Jul-14, 11:33 am)
பார்வை : 252

மேலே