ஒரு பூனை கத்துகிறது
எனது மதுக் குவளையில்
எனது
ரகசிய காதலியின்
காதோர
பூனை முடிகள்
மிதப்பதை
வடிகட்டாமலே
உணர்கிறேன்....
போதைகளின் அதீதம்
மௌனங்களாய்
பீரிட்டு
எழுவதைத் தான்
மதுவாக்கி
இருப்பது போல
ஒரு பூனை கத்துகிறது
எனது அறையில்....
கவிஜி