பூச்சரம்-1

இளமை தெரியாமலிருக்க
இழுத்து போர்த்தின...
இலைக்கொண்டு,
தாமரை குளம்;

பிள்ளைக்கு ஷூ
இட்டு அனுப்பியாயிற்று...
வெறும் காலுடன்,
தந்தை;

தாய்நாட்டின் அவலத்தை
மூடிமறைக்கிறது....
ஈ கூட்டம்,
திறந்தவெளி மலம்;

எழுதியவர் : பசப்பி (3-Jul-14, 10:02 am)
பார்வை : 104

சிறந்த கவிதைகள்

மேலே