அண்ணனும் NOKIA நானும் NOKIA

இதோடு 7 மிஸ் கால் ஆயிடுச்சு.....
தமிழ்ல என்ன சொல்வாங்க?? ஹ்ம்ம்.... "தவறிய அழைப்பு"
ஆனா நா தவறிய அழைப்பு கொடுக்கணும் நினைக்கல, கொடுக்குற அழைப்பு தான் தவறிட்டே இருக்கு:(
எப்பவும் முதல் கால் வந்ததும் பேசுறவன் இன்னைக்கு ஏழு ஆகியும் எந்த பதிலும் இல்ல....
அதும் இன்று எங்களுக்கு மிக முக்கிய நாள் இந்த நாளை என்றுமே மறந்ததில்லையே.... .
என் NOKIA வை கோபத்தோடு முறைத்து விட்டு அமர்ந்தேன்.
அவனை பற்றிய நியாபகங்கள்...
6 மாதங்கள் ஆயிற்று வேலைக்காக வெளியூர் சென்று.... என்னை விட்டு பிரிந்து....
இந்த 6 மாதங்களில் நிறைய மாறிபோய் உள்ளான்,,,,,
முன்பெல்லாம் அழைத்தால் "என்னடி முட்டகண்ணி" என்பவன் இன்று "சொல்லுமா " என்கிறான்
நான் செய்யும் நகைச்சுவையை ரசித்தாலும் "மொக்க போடாதடி " என்பவன் இன்று ஒன்றுமே இல்லாததுக்கு கூட சிரிக்கிறான்,,,
மாறியது அவன் மட்டு மல்ல நானும் தான்....
அவன் தேவையன்றி சிறு செலவு செய்தாலும் திட்டி வீட்டையே இரண்டாக்கும் நான் இன்று அவன் வருவாயை விட அதிகமான விலையில் ஒரு NOKiA XL வாங்கிய போது திட்ட மனம் இன்றி "super da " என்றேன்.
அவனுக்கு தோசை என்றால் அவ்வளவு பிரியம்,,,, எத்தனையோ நாட்கள் துக்க கலக்ககத்தில் ஊற்ற பொறுமை இன்றி " இன்னும் எத்தன டா?? " என்று சலிப்புடன் நான் கேட்டதை எண்ணி இன்று என்னை நானே கடிந்து கொள்கிறேன்... இன்று எத்தனை என்றாலும் ஊற்றி கொடுக்க நான் தயார் ஆனால் அவன் வழக்கமாய் அமர்ந்து உண்ணும் இடம் தான் வெறுமையை இருக்கிறது.......
அருகில் இருக்கையில் அறியாமல் போனேன் அவன் அருமையை.....
எத்தனையோ சண்டைகள் வந்த போதும் பேசாமல் இருந்ததில்லை என்பதை விட நாங்கள் பேசுவதே சண்டை போடத்தான் என்று சொல்வது தான் சரி....
அதும் நான் பேசாமல் இருப்பது என்பது மிகவும் கடினம் நான் என்ன பேசினாலும் அலுக்காமல் கேட்பவன் அவன் ஒருவனே ..
இன்று நான் பேசுவதையே மறந்து போனேன்,, "சாப்பிடாயா ? என்ன சிப்ட்?" என ஒன்றிரண்டு வார்த்தைகளோடு சரி...
இப்படி வேகமாய் ஓடி ஓடி கொண்டிருந்த என் எண்ண ஓட்டத்தை கலைத்தது என் NOKiA ring tone ஆம் அவனே தான்.....
அழைப்பை ஏற்று காதில் வைத்தேன் "சாரி மா..." என்று காரணம் சொல்ல வந்தவனை மறித்து சொன்னேன்

" ஹாப்பி rakshabhandhan டா அண்ணா" .............

எழுதியவர் : சௌமியா (4-Jul-14, 10:07 am)
பார்வை : 305

மேலே