காதல் ஜெயித்தது 1

போடிபாளையம் ஒரு அழகான கிராமம். விவசாயமே பிரதானம். வெள்ளந்தி மக்கள். சந்தோசம் தென்றலாய் வீசியது. சத்யா 16 வயது பருவ மங்கை. ஒடிசலான தேகம். சிவப்பு நிறம். கருநாகம் தோற்றுவிடும் கூந்தல். பள்ளி இறுதி வகுப்பு படித்து வந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன் உண்டு.
கல்லூரியில் படித்து வந்தார்.

சத்யா ஓவியம் வரைவதில் கெட்டிக்காரி. பொறுமைசாலி. கூச்ச சுபாவம் உள்ளவள்.
யாருடனும் அதிகம் பேசமாட்டாள். தானுண்டு தன வேலையுண்டு என்றிருப்பாள்.
மடித்து போட்ட ரெட்டைஜடை இடையை தாண்ட , கண்ணாடியில் அழகு பார்த்தாள். ஏய் சத்யா இன்னுமா கிளம்பலை ? அம்மா கேட்க, இதோ ரெடி மா என்று கிளம்பி வந்தாள். இரண்டு இட்லியை பிட்டு வாயில் போட்டு கொண்டு தனது சைக்கிளை மிதித்து கொண்டு கிளம்பி விட்டாள்.
சக தோழிகள் வழியில் சேர்ந்துகொள்ள பள்ளிக்கு போய் சேர்ந்தாள். அன்பரசு அவள் பின்னாலேயே பாலோ பண்ணி சென்று கொண்டிருந்தது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. காலையும் மாலையும் அவளை நிழலாய் தொடர்ந்து கொண்டிருந்தான். அவளது அத்தை மகன். அவளை உயிராய் நினைத்து கொண்டிருந்தான். அவனுக்கு முறை பெண்கள் நாலைந்து பேர் இருந்தும் சத்யாவையே விரும்பினான். அவளது அமைதியே அவள் பக்கம் அவனை ஈர்த்தது .
என்னடா அன்பு இன்னைக்கு டூட்டி முடிஞ்சுதா? குமார் கலாய்க்க? சும்மா இருடா. படிக்கிற புள்ளை. தொந்தரவு செய்ய கூடாதுடா?என்று கடிந்து கொண்டான். ஆம் . அவன் காதலை ஒருமுறை கூட அன்பு அவளிடம் காட்டிவிட வில்லை. அவள் நன்றாக படிக்க கூடியவள். நம்மால் அதை அவள் இழக்க கூடாது என்பதில் உறுதியோடு இருந்தான். அவள் படிப்பு முடியும் வரை காத்திருக்க முடிவு செய்திருந்தான்.
அன்பரசன், அப்பா அவனது 2 வயதிலேயே இறந்து விட தாய் கஷ்டப்பட்டு உழைத்து வளர்த்தினால்.
ஆனால் அன்பரசனுக்குதான் படிப்பு ஏறவில்லை.

தொடரும் ...

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (4-Jul-14, 5:48 pm)
பார்வை : 161

மேலே