குடியரசு - சிறு விளக்கம்

இன்று நாங்கள் ஆறு நண்பர்கள் ஒரு சிறிய குழப்பத்தில் இருந்தோம். அதாவது, இரு குறிப்பிட்ட உணவகங்களில் எதில் சென்று உணவு உண்பது என்பது. அப்போது ஒவ்வொருவரின் கருத்தும் வேறுபட்டது. உடனே நான் 'குடியரசு' முறைப்படி முடிவெடுக்கலாம் என எண்ணி, "சரி, 'அ' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹோட்டலுக்கு போலாங்குறவங்க கை தூக்குங்க'நு சொன்னேன். என்னையும் சேர்த்து மூனு நபர்கள் தூக்கினோம்.

பின் ஒருவனின் முழியே அவன் கொஞ்சம் தடுமாறி நடுநிலையில் இருக்கிறான் என்பதை காட்டியது. உடனே எங்கள் தரப்பில் ஒருவன் மெல்லமாக பேசி அவனை இழுத்துவிட்டான். இப்போ பெருபான்மை கிடைத்துவிட்டது.

மீதி இரண்டு பேரும் கட்டாயம் வரவேண்டும் என கட்டாய படுத்தினோம். அதில் ஒருவன் சரி என மனசு மாறி வந்துவிட்டான்.

இன்னொருவன் அப்போதும் விருப்பம் இல்லை என்றான். எங்கள் தரப்பில் இருந்து மூன்று பேர் சென்று கழுத்தில் கை வைத்து இழுத்து வந்தனர்.

வாழ்க மக்களாச்சி! வாழ்க பாரதம்!!

எழுதியவர் : ந.நா (4-Jul-14, 1:27 pm)
பார்வை : 475

மேலே