எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்

தோழமை நெஞ்சங்களே,
எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் சார்பாக திரு அகன் அய்யா அவர்கள் அறிவித்துள்ள தமிழ்ப் போட்டிகள் விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. ஆண், பெண் மற்றும் திருநங்கை என்றும் மரபு மற்றும் புதுக் கவிதை என தனித்தனியாக பரிசுகள் அறிவிக்கப் பட்டிருப்பதால் படைப்பாளிகளிடமிருந்து அதிகப் படியான போட்டிப் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. படைப்புகளை சமர்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளபடியால் உங்கள் போட்டிப் படைப்புகளை விரைந்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
மேலும் படைப்பாளிகள் அறிவது யாதெனில் எழுத்து தளத்தின் போட்டிக்கான படைப்புகளும் அறக் கட்டளை நடத்தும் போட்டிகளில் சமர்பிக்கப் பட்டிருப்பதால் அதனை மாற்றி அமைக்கும் படி படைப்பாளிகள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். அனைத்து படைப்புகளும் ஒன்றாக சமர்பிக்கப் படுமாயின் பிரித்து எடுப்பதில் சிரமம் ஏற்படும். எனவே அறக்கட்டளைக்கு மட்டுமான படைப்புகளை "மற்ற போட்டிகளுக்கு" என்பதில் சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள். எப்பொழுதும் போல் எழுத்து தளத்தில் சமர்பிக்கப் படும் படைப்புகளை "எழுத்து போட்டிக்கு" என்பதில் சமர்பிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
போட்டியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
நட்புடன்,
சொ. சாந்தி.
=========================================================================================================================================
எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்
போட்டி விவரங்கள்
1.தலைப்பு - கவிதை
"மீண்டும் வானம்பாடி "
2.வரிகள் 16 --வரி ஒவ்வொன்றிலும் நான்கு தமிழ்ச் சொற்கள்
3..மரபு மற்றும் புதுக்கவிதை தனி பரிசுகள்
4. பிழைகளுக்கு இடம் இல்லை
5.பங்கேற்பு: தளத்தின் இன்றைய உறுப்பினராக உள்ளவர்கள் மட்டும்
6.ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்
7.நடுவர்கள் : தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள்
பரிசு விவரங்கள்
பரிசுகள் : 5100 /-
ஆண் ,பெண் , திருநங்கை என மரபு ,மற்றும் புதுக்கவிதை தனியாக முதல் பரிசு 500 ரூபாய் இரண்டாம் பரிசு 250 மூன்றாம் பரிசு 100- மதிப்புள்ள 'புது
'நூல்கள் மற்றும் அழகிய பட்டயம்
ஆரம்ப நாள் : 01-Jul-2014
இறுதி நாள் : 07-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Jul-2014
=========================================================================================================================================
எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------கட்டுரை
போட்டி விவரங்கள்
1.தலைப்பு : அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தரமும் உயர....
2.அளவு : தளத்தின் 5 பக்கங்கள்
3. ஒருவர் ஒரு படைப்பே அளிக்கலாம்
4. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டுமே
5. பிழைகள் இல்லை
6. ஆண் ,பெண் திருநங்கை என தனி பரிசுகள்
7. தமிழ் மொழியில் மட்டுமே
பரிசு விவரங்கள்
பரிசு:ரூபாய் 2550/-மதிப்புள்ள புது நூல்கள்
முதல் பரிசு 500/-
2ம் பரிசு 250/-
3ம் பரிசு 100/-
ஆரம்ப நாள் : 01-Jul-2014
இறுதி நாள் : 07-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Jul-2014
==========================================================================================================================================
எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்(சிறுகதை )
போட்டி விவரங்கள்
1.தலைப்பு : அவள் அப்படித்தான்
2. அளவு : தளத்தின் 3 பக்கங்கள்
3. வட்டார வழக்குகள் அனுமதி உண்டு .
4. ஆங்கில சொற்கள் மற்றும் பிழைகள் இல்லை
5. தளத்தின் இன்றைய உறுப்பினர்கள் மட்டும்
6. ஆண் , பெண் , திருநங்கை என தனி பரிசுகள்
பரிசு விவரங்கள்
ரூபாய் 2550/-மற்றும் அழகிய பட்டயம்
முதல் பரிசு 500/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
2ம் பரிசு 250/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
3ம் பரிசு 100/-மதிப்புள்ள 'புது' நூல்கள்
ஆரம்ப நாள் : 01-Jul-2014
இறுதி நாள் : 07-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Jul-2014
=========================================================================================================================================
திறனாய்வு போட்டி விவரங்கள்
1.தளத்தில் பதியப்படும் போட்டிக் கவிதைகள் ,கட்டுரைகள் ,சிறுகதைகள் மீதான விமர்சனங்கள்...
2. விமர்சனங்கள் பல பிற எழுத்தாளர்களின் ஒப்புமை எடுத்துக்காட்டுகளோடும் தளத்தின் 2 பக்கங்களுக்கு குறையாமலும் 3 பக்கங்களுக்கு மிகாமலும்...
3. ஒருவர் ஒரு விமர்சனமே....கதை கவிதை கட்டுரை என தனியே...
4. தளத்தின் உறுப்பினர்கள் மட்டுமே...
5. ஆண் ,பெண் ,திருநங்கை என தனி பரிசுகள்...
6. பிழைகள் இல்லை ...
பரிசு விவரங்கள்
பரிசுகள்....7650/-மதிப்புள்ள புது நூல்கள்..
முதல் பரிசு 500/-
2ம் பரிசு 250/-
3ம்பரிசு 100/-
நடுவர்கள் தீர்ப்பே இறுதி...
ஆரம்ப நாள் : 01-Jul-2014
இறுதி நாள் : 07-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 15-Jul-2014
==========================================================================================================================================
எழுத்து தள தோழர்கள் அறக்கட்டளையின் தமிழ்ப் போட்டிகள்-------மொழிபெயர்ப்பு
போட்டி விவரங்கள்
1.அறக்கட்டளையின் பரிசு பெறும் படைப்புகள் மீதான ஆங்கில மொழிபெயர்ப்புகள் மட்டுமே....
2. ஆண் ,பெண் .திருநங்கை என தனி பரிசுகள்..
3. ஒருவர் ஒரு மொழிபெயர்ப்பு மட்டும் என....கவிதை ,கதை ,கட்டுரை என தனியே...
4.நேரடி மொழி பெயர்ப்பு மட்டுமே...
பரிசு விவரங்கள்
7650/-மதிப்புள்ள புது நூல்கள்...
ஆரம்ப நாள் : 15-Jul-2014
இறுதி நாள் : 25-Jul-2014
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 31-Jul-2014
=========================================================================================================================================