இறந்தே பிறந்தது தமிழ்

நெடு நாட்களின் பின் ஒரு
வெளிநாட்டு அழைப்பு
மாமா.. என்றான் அக்கா மகன்
வெளிநாட்டில் பிறந்தவனிடம் கூட
அழகாக தமிழ் பிறந்து இருக்கிறதே!
என்று எண்ணி முடிப்பதற்குள்
எனக்கும் "தமில்" தெரியும் எப்பூடீ.. என்று தொடர்ந்து முடித்தான்..
அப்போது தான் உணர்ந்தேன் இறந்தே பிறந்தது தமிழ் என்று

பேசிக் கொல்லாதே தமிழை- தமிழா
பேசாமல் மென்று விடு

எழுதியவர் : சுஜன் (4-Jul-14, 10:46 pm)
பார்வை : 181

மேலே