போர்த்தொழில் பழகு

எதிர்த்து நில்
எமனும் பின்வாங்குவன்!

அச்சம்...
உன்னைக் கண்டு
ஐயப்படுட்டும்!

பார்வையில்...
பற்றி எரியட்டும்
இப்பிரபஞ்சம்!

உயர்ந்த எண்ணம் கொள்
உனதாகும் உலகம்!

ஓடி ஒளியாதே...
உலகம் உன்னை விரட்டும்!

நம்பிக்கை வை...
தும்பிக்கையாக!

வியூகம்...
வகுத்து நிற்கட்டும்
வீரம்!

போர்த்தொழில் பழகு!

எதிரியின் மார்பு...
கேடயமாகட்டும்!!

எழுதியவர் : Tamilarasan M surya (4-Jul-14, 10:52 pm)
பார்வை : 1263

மேலே