அவள் அப்படித்தான்

“டாக்டரம்மா...... டாக்டரம்மா..... எம் மவ எப்படி....இருக்கா.....”
“பயப்படதேவையேயில்லை..ரத்தம் கொஞ்சம் அதிகமா போயிருக்கு..குழந்தையோட பிறப்புறுப்புல அதிக சேதாரமாகிருக்கு,அத ஆப்ரேஷன் பண்ணி தான் சரி பண்ண முடியும்”
“ஐயோ..என்னமா ஆப்ரேஷன்னுலாம் சொல்றீங்களே”
“பயப்படவேண்டாம் சின்ன அறுவைசிகிச்சைதான்..நீங்க கையெழுத்து மட்டும் போடுங்க”
“உங்களதான் தெய்வமா நம்பி இருக்கேன்..எப்படியாவது என் குழந்தைய காப்பாத்திருங்க”
“எப்படிங்க இப்படியா குழந்தைய கவனிக்காம இருப்பிங்க??”என பாரதி ஆதங்கத்தில் கேட்டாள்.
“விதிமா விதி வேறன்ன சொல்ல...குழந்தை வெளியில தான விளையாடிகிட்டுயிருக்குனு இருந்துட்டோம்..திடிர்னு குழந்தை அழுதிகிட்டே உள்ள வந்திச்சு, மூனு வயசு குழந்தைக்கு என்னமா தெரியும் அதுக்கு தெரிஞ்ச விதத்துல சொல்லிச்சு அப்புறமா தான் கவனிச்சோம் பாப்பா துணியெல்லாம் ரத்தம்...பாவி பய இப்படி பண்ணுவானு நின்னைக்கவேயில்லை”
“யாருங்க அவன்?”
“பேரு முத்து...சின்ன பையன் 18,19 வயசு தான் இருக்கும்,எங்க சேரி தான்மா நாலு குடிசை தாண்டி தான் அவன் குடிசை, விளையாடிகிட்டிருந்த பிள்ளையை தூக்கிட்டு போய் இப்படி பண்ணிட்டான்மா”என்று தலையில் அடித்துக்கொண்டு அழுத மாரிக்கு ஆறுதல் சொல்லிவிட்டு பாரதி உள்ளே வந்தாள்.
பாரதியின் வெளிரிய முகத்தை பார்த்த செவிலி கேட்டாள்
“என்ன டாக்டர் ஒரு மாதிரி இருக்கிங்க?”
“என்னனு சொல்ல சொல்ற சித்ரா..பாரு மூனு வயசு குழந்தையை..எப்படி பண்ணிருக்கானு...என்னால அத ஜீரனிக்கவே முடியல..எந்த இடம் இவங்க?”
“அதான் டாக்டர் நம்ம கந்தன் தெருக்கு முன்னாடி ஒரு சேரி வருமே அந்த இடம் தான்..எதுக்கு டாக்டர் இதுக்கு போய் இவ்வளவு மண்டைய ஒடைக்கிறீங்க..காலம் கலிகலாம் டாக்டர் வேறன்ன சொல்றது”
“சரி..தடையவியல் பரிசோதனைக்கு அனுப்பிரு,தேட்டர் ரெடி பண்ணிரு,டாக்டர் சுஜாதா வந்திட்டாங்க அவங்க தான் ஆப்ரேஷன் பண்ண போறாங்க,என் டுயுடி முடியுது,நான் கிளம்புரேன்” என்று பாரதி கூறிவிட்டு அவள் காரை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டாள்.நெஞ்சுக்குள் நெரிஞ்சி முள்ளாய்.அந்த சம்பவம் குத்திக்கோண்டே இருந்தது.
இரவு 2.30மணி...
டாக்டர் பாரதியின் கருநீல கார் அந்த கரிய இருளை கிழித்துக்கொண்டு கந்தன் தெருவுக்குள் நூழைந்தது.தெருவில் ஒரு கிழட்டு நாயை தவிர வேறு நடமாட்டம் எதுவும் இல்லை.ஒரு மறைவிடத்தில் காரை நிறுத்திவிட்டு பாரதி சேரியின் பின்புறமாக நுழைந்தாள்.அவள் சேகரித்த தகவல்களில் இருந்து முத்துவின் வீட்டை கண்டுப்பிடிப்பது எளிதாக இருந்தது.அவளுக்கு சாதகமாக மின்சாரம் அணைக்கப்பட்டிருந்தது,அந்த இருளிலும் பாரதியின் கண்களுக்கு போதையில் படுதிருந்த முத்து தெரிந்தான்.ஓசை படாமல் நுழைந்தவள் குடிசையின் கதவை மூடிவிட்டு.அவளின் டார்சை ஆன் செய்தவள் அவளின் மருத்துவப்பையில் இருந்து ஒரு மயக்க ஊசியை அவனுக்கு செலுத்தினாள்.அவளின் அறுவைசிகிச்சை பையில் இருந்து வேண்டிய சாதனங்களை வெளியே எடுத்தவள்,அந்த குடிசையை ஒரு சிரிய அறுவைசிகிச்சை அறையாகவே மாற்றினாள்.ஒரு மயக்க மருந்தை எடுத்து அவனின் முதுகெலும்பில் செலுதியவள்,அவனின் ஆண்குறியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினாள்.
அடுத்த நாள் காலை மருத்துவமனை நோக்கி பாரதியின் கார் சென்றுக்கொண்டிருந்தது,பாரதி ஓட்ட அவளின் தோழி சுகுணா அருகில் அமர்ந்து கொண்டிருந்தாள்
“என்னாச்சு பாரதி நேத்து ராத்திரி,எங்க போயிட்டு வந்த உன் கார் எங்கயோ போனத பார்த்தேன்”
“ஒன்னுமில்லை சுகு.....வழக்கமான ஆப்ரெஷன்தான்.....”
சுகுணா புரிந்தவளாய் புன்னகை புரிந்தாள்
“எத்தனாவது ஆப்ரெஷன்..இது..”
“என்ன அஞ்சவதோ,ஆறவதோ இருக்கும்”
“இந்த தடவ என்ன கேசு”
“17வயசு பையன் மூன்று வயசு குழந்தையை சீரழிச்சுட்டான்”என பாரதி சீற்றத்தில் சொன்னாள்
சுகுனா அதிர்ந்தாள்”என்னப்பா சொல்ற பையன் சின்ன வயசா இருக்கானே அவனுக்கு போய்யா ஆப்ரேஷன் பன்னுன்ன ...தப்பு பன்னிட்ட பாரதி..நீ
“அவனுக்கு மட்டும் கண்ணுல வயசு தெரிஞ்சுதா,பச்சப்பிள்ளைய போய் இப்படி பன்னிருக்கான்,இங்க பாரு சுகுன பாம்பு நஞ்சுனு தெரிஞ்சா அது எந்த வயசானாலும் பல்ல புடுங்க தான் செய்யனும்”
எடதுபுறம் சென்றுக் கொண்டிருந்த கார் தீடிரென்று சாலையின் மையத்திர்க்கு வர,எதிரில் வந்த லாரி கிரீச்சென்று நின்றுவிட்டு,கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு சென்றது
“ஏய் பாரதி என்ன பன்ன இப்ப,ஒரு நிமிஷம் முடிஞ்சோம்னு நின்னைச்சேன்,இப்படியா ஓட்டுவ?”
“இல்ல சுகு உங்கிட்ட பேசிகிட்டே வந்தனா,அப்பதான் திடிர்னு கவனிச்சேன் ஒரு ஓணான் கடந்துச்சு,நான் நிறுத்தி இருந்தா கூட அது மேல ஏத்திருப்பேன்,அதனால தான் ஒரு கட் அடிச்சேன் லாரி வந்துட்டான்”
“லூசா பாரதி நீ.....ஓணானுக்காக கட் அடிப்பியா,உயிர் போச்சுனா??”
“கூல் சுகு அதுவும் ஒரு உயிர் தானே”
“என்னால உன்னைய புரிஞ்சிக்கவே முடியல பாரதி”என சுகுனா கூற,பாரதி ஒற்றை புன்னகையை மட்டும் பதிலாக அளித்தாள்.

எழுதியவர் : சு.சிந்து சாரதாமணி (6-Jul-14, 5:39 pm)
Tanglish : aval abbadiththan
பார்வை : 153

மேலே