பால் வியாபாரம்

பால் மாடு இல்லாமலே,
பால் வியாபாரம் நடுக்குது.
வியாபாரம் சோராய் நடக்குது .

கொள்முதல் குறைவு,
கொடுப்பதோ அதிகம்.
நூறு லிட்டர் பால் வாங்கி,
இரநூறு லிட்டர் வியாபாரம்.

பாலில் நீர் ஊற்றி காய்ச்சுவதும் ,
பாலில் தண்ணீர் ஊற்றித் தருவதும் ,
சிரமம் குறைக்கும் செயல்.
செய்வது கலப்படமல்ல,
சமூக சேவை.

கொழுப்பில்லாத பால் குடியென்குது,
மருத்துவம்.
நீர் ஊற்றிய பால் கொழுப்பு நீக்கப் பட்டது ,
என்பது எங்கள் தர்க்கம் .

விலையென்று பார்த்தால்
வெறும் தண்ணீருக்கு
கொடுக்கும் காசை விட
பாலும் சேர்வதால்
பாதகமில்லை என்றே நினைப்பீர் .

எழுதியவர் : arsm1952 (6-Jul-14, 9:10 pm)
Tanglish : paal vyapaaram
பார்வை : 168

மேலே