பணத்தினை நேசிக்காதே

பணம்! பணம்! பணம்!
பலபேர் செல்வங்களுக்கு தரும் மரியாதையை, சொந்தங்களுக்கு தருவதில்லை.
பணத்தை வைத்து தூங்குவதற்கு இடத்தை வாங்கலாம்.
ஆனால் தூக்கத்தினை வாங்கமுடியாது.
பணத்தை வைத்து புத்தகத்தினை வாங்கலாம்.
ஆனால் அறிவினை வாங்கமுடியாது.
பணத்தை வைத்து விலையுர்ந்த வைர ஆபரணங்களை கூட வாங்கிவிடலாம்.
ஆனால் விலைமதிப்பற்ற கள்ள கபடமற்ற குழந்தையின் சிரிப்பினை வாங்கமுடியாது.
அறிவை வளர்த்துக்கொள்.... பணம் தானாக வரும் என்பார்கள்..
ஆனால் அத்தகைய அறிவை வளர்த்துக் கொள்ளக் கூட பணம் தான் தேவை..
சினிமா டிக்கெட் எடுக்க சில நூறுகளை செலவு செய்யும் சில பேர், பசித்த சிறார்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கு மனமில்லை..
யார் யாரோ நல்லா வாழ்வதற்கு உழைக்கும் நாம், உற்றார், உறவினரிடம் பேசக்கூட நேரம் இருப்பதே இல்லை....
திறமையிருந்தும் பணமில்லாமல் படிக்க இயலாமல்
இருக்கும் குழந்தைகள் ஒருபுறம்.
கல்வி கற்க வழியேதுமில்லாமல் கல்லுடைக்கும் பிஞ்சு ஏழைக் குழந்தைகள்..
பட்டினியில் வாடி ஒருவேளை சாப்பாட்டிற்காகப் பணமீட்ட படும்பாடு...
பணமே, ஏழை, பணக்காரன் என்றப் பேதத்தை உருவாக்க அத்தகையப் பணத்தின் மீது பற்று ஏனடா மானிடா?
பிஞ்சு ஏழைக் குழந்தைகள் பட்டினியில் அழும் அழுகுரல்கள், தின்பண்டம் அற்று வீதியில் கதறும் ஏழைக் குழந்தைகளின் கதறல்கள் இதையெல்லாம் கண்டால், தேவைக்கு அதிகமாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து இல்லாததைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்று முறையே இருந்திருக்கலாம்.பண்டமாற்று முறையிலிருந்து எவனடா பணத்தினை கண்டுப்பிடித்தது?..என்று நினைக்கத்தோன்றுகிறது..
பணமே ஏழை, பணக்காரன் என்றப் பேதத்தை உருவாக்க அத்தகையப் பணத்தின் மீது பற்று ஏனடா? மானிடா? இருப்பதில் ஒருபங்காவது இல்லாதவர்களுக்குக் கொடுக்கலாமே என்று ஏன் யோசிக்கக்கூடாது???
மண்ணோடு போவதை மனதிருப்தியோடு ஏன் கொடுக்கக்கூடாது.?


அ.சௌம்யா...

எழுதியவர் : அ.சௌம்யா (6-Jul-14, 11:25 pm)
பார்வை : 872

சிறந்த கட்டுரைகள்

மேலே