காதலாகி கசிந்து

"காதாலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" - தேவாரம்
மெய்யும் உயிரும் கூடியது போல....
நானும் உன் நினைவும் கூடிவிட்டோம்!!!
நீ என்னுள்
காதலை வளர்க்கவில்லை...
காதலை உணர்த்தவில்லை...
காதல் என்ற ஒன்று
இப்புவியில் என்னால்
தனித்துக் காண முடியவில்லை!!!
காண்பதெல்லாம் காதலன்றி
ஏதுமில்லை...
நீ உணர்வின் பெருக்காய்
என் உணர்வினை பெருகச் செய்தாய்!!!
காதலின் செருக்காய் - எனை
கவிமழை சிந்தச் செய்தாய்!!!
உன்னால் என் கண்ணீரும்
கவிதைகளாய்...
கவிதைகளும்
கண்ணீராய்....
நீ என்னுள்
காதலை வளர்க்கவுமில்லை, உணர்த்தவுமில்லை தான்...
அனால்
என்னுள் காதலாகி விட்டாய்....
காதலென்னும் பொருளாகிவிட்டாய்!!!
அப்பொருளே எனக்கு
பரம்பொருளாகிவிட்டது!!!
காண்பதெல்லாம் காதலே...
கேட்பதெல்லாம் காதலே...
சுவைப்பதெல்லாம் காதலே....
முகர்வதும் காதலே....
உணர்வதும் காதலே....
என் ஐம்பொறிகளும்
அடங்கிவிட்டன காதலுள்...
நானும் அடங்கிவிட்டேன் அதனுள்....
என்னுள் என் காதலை எத்துனை தான் அடக்கமுடியும்....
முடியவில்லை...
இந்த காதலை என் உடலுக்குள் அடக்கமுடியவில்லை....
அந்த பிரமத்தை
இந்த பிண்டத்துள் எப்படி அடைப்பது???
போதவில்லை...
போதவில்லை....
போதாததால் தான்
அது என்னைக் கடந்து...
என் காதல்
என் மெய்யைக் கடந்து....
என் உயிரைக் கடந்து
கண்ணீராய் கசிகின்றது....
என்ன செய்வது...
என்னுள் பொங்கும் இந்தக் காதலை உணர்த்த
என்னுள் அடக்கமுடியாத இந்த காதலை உணர்த்த
கண்ணீராய் கரைகிறேன் நான்....
கண்ணீரில் கரைகிறேன் நான்!!!! - சௌந்தர்