சில்லென்ற வருகை 0தாரகை0

கல் போன்ற உன் மனதும்
******கனியும் காலம்!
வில்லம்பு வேகத்தில் பாய்ந்து
******விரைந்து வரும்!
சொல்லத்தான் துடிக்கின்றேன்
*******எந்தன் அன்பை!
வெல்லத்தான் போகின்றேன்
*******உந்தன் மனதை!

வெள்ளமாய் பெருக்கெடுக்கும்
******என் உள்ளத்தாசை!
பள்ளத்தில் தள்ளிவிட
******பார்ப்பதும் ஏனோ?
துள்ளிவரும் குழந்தைபோல்
******என்னை எண்ணி
அள்ளி நெஞ்சில் அணைத்திடயேன்
*******உன்னில் தயக்கம்?

முள்ளான வார்த்தைகள் நீ
*******பேசினாலும்
கள்ளனே என் காதில்
*******தேன் தான் பாயும்
வெல்லமாய் இனித்திடும்
********திகட்டாதென்றும்
சில்லெனக் குளிர்ந்திடும்
********உன் வருகை போதும்!

மெல்லமாய் வளரட்டும்
*******என்மேல் காதல்!
செல்லமாய் பேசிடும்
*******அந்நாள் போதும்!
இல்லாமல் மறைந்திடும்
*******என் துன்பம் எல்லாம்!
பல்லக்கில் பயணிக்கும்
*******நம் இதயம் இரண்டும்!!!

எழுதியவர் : தாரகை (8-Jul-14, 10:43 pm)
பார்வை : 169

மேலே