புது குரல் பிளாஸ்டிக்
![](https://eluthu.com/images/loading.gif)
தீயினார் சுட்டபின் புகையாகும் நமக்கு
பகையாமே விட்டு விடு
நீரின்றி அமையாது உலகெனின் நிலத்தடிநீர்
அமையாது அதை தடுக்கா விடில்
மாசு பெரும்கடல் நீந்துவர் நீந்தார்
பிளாஸ்டிக் அடிசேரு பவர்
பொருள்சேரா பெரும்வினையும் சேரா பிளாஸ்டிக்
வினை அறிந்தார் மாட்டு