நலமுடன் வாழ,

தொடர்ந்து செல் துணிந்து நில்
அல்லல் படுவோருக்கு ஆறுதல் கொடு

புகுந்திருக்கும் வன்கொடுமைகளை
வேருடன் பிடுங்கி ஏறி

விதண்டாவாதம் வீண்பேச்சு
வளர்ந்திட வழி விடாதே

சமரசம் சமத்துவம் தழைத்திட
அமைதி வழியை காட்டு

பொறாமை எனும் பெரும் நெருப்பை
அடியோடு அழித்துவிடு

பணத்திற்காக பேயாய் அலையும்
மக்கள் அழிவுக்கு வழி தேடுகிறார்கள்,

பணம் பெரிதல்ல மனிதனே மாண்பு
மிக்கவன் என்பதை எடுத்துக் கூறு

ஏழை பணக்காரன் பாகுபாடு இன்றி
இணைந்து வாழக் கற்றுக் கொடு

இயல்பாய் நாம் வாழவேண்டும்
இறைப் பற்றும் மனித நேயமும்

இந்திய மக்களின் கொள்கைகளாய்
இருப்பதே அவசியம் அவசியம் .

எழுதியவர் : பாத்திமா மலர் s (8-Jul-14, 10:19 pm)
பார்வை : 358

மேலே