ப்ரிய மாஜி காதலி

நீயும் நானுமாய்
நானும் நீயுமாய்
நாம் இருவருமாய்
ஈ ஓட்டுகின்ற
அந்த டீக் கடையில்
ரொட்டியுடன் தேநீர் அருந்திய
மாலைப் பொழுதுகள்
தேநீரில் ஈ வந்து விழுந்த போது
என்ன செய்வது என்று
தவித்து நின்ற தருணங்கள்
அப்போது குத்துப் பாட்டு ஒன்று ஒலிக்க
திடீரென்று நீ துள்ளிக்குதித்து ஆட
பதறிச் சிதறி ஈக்கள் பறக்க ...
மறக்க முடியுமா அந்த நேரங்களை
இப்படிக்கு
உன்னை மறந்து
மற்றொருவனை மணந்த
உன் ப்ரிய மாஜி காதலி !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-14, 3:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 110

மேலே