எங்கே இருக்கிறாய் நீ

என் ஆன்மா தேடும் அழகே!
அக இருளை விரட்டும் ஒளியின் உதயமே!
மனம் வரையா சித்திரமே!
சொல்லில் அடங்கா சூட்சுமமே!
மாலையில் தோன்றும் மஞ்சள் நிலவே!
நித்திரையில் நீராடும் கற்பனையே!
நீண்ட இரவின் நெருங்கிய தோழியே!
வியக்க வைக்கும் காலையே!
மயக்க வைக்கும் மாலையே!
இதயத்தை இயங்க வைக்கும் இனிய கீதமே!
மழை பெய்த காலையின் மண் வாசனையே!
மன அமைதி பேணும் பசுமை பள்ளத்தாக்கே!
தேகத்தை குளிர்விக்கும் இனிய தென்றல் காற்றே!
சிறு புற்களிலும் சூரியனைக் காட்டும் பனித்துளியே!
பசிக்கும் குழந்தைகளின் அமுதசுரபியே!
தென்னை மரப் பூக்களில் வளரும் இளநீரே!
வின்னிலிருக்கின்றாயா
மண்ணிலிருக்கின்றாயா
எங்கே இருக்கிறாய் நீ