க.சம்பத்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : க.சம்பத்குமார் |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 05-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 383 |
புள்ளி | : 55 |
சிந்தனைக் குப்பைகளை சில்லறையாய் இறைத்து வருபவன். சில நேரம் சில சிதறல்கள் நட்சத்திரங்களாக மின்னக்கூடும். ''மின்னுவதெல்லாம் பொன்னல்ல'' அதற்க்கு நான் பொறுப்புமில்லை
அன்பே!
நீ தேய்பிறையானாலும்,
வளர்பிறையானாலும்,
நீ தானே என் பௌர்ணமி.
வேல்விழியாள் வேந்தனை எண்ணி
கானம் இசைத்தால் காலம் மறைய
தம்புராவில் இழைந்த தவம்
தாளக் கம்பிகளை தரித்துவிட
வாள் கொண்டு தவம் கொண்டாள்
போருக்குச் சென்றவன்
இதோ மலர்ப் பொதிகையிலே!!!
பார்வையால் வேர் பிடித்து
பேசிப்பேசி இலை விட்டு
ஸ்பரிசத்தால் கிளை பரப்பி
நேசித்து
பூஜித்து
யாசித்து
இதயத்தில் மலர்ந்த பூவை
எடுத்து
தொடுத்து
மணமாலை ஆக்கும்முன்பே
காலத்தால்
கொண்ட கோலத்தால்
காரண காரியத்தால்
காயாகி
கனியாகி
விதையான ஒரு விருட்சம்
மீண்டும்!
என் ஆன்மா தேடும் அழகே!
அக இருளை விரட்டும் ஒளியின் உதயமே!
மனம் வரையா சித்திரமே!
சொல்லில் அடங்கா சூட்சுமமே!
மாலையில் தோன்றும் மஞ்சள் நிலவே!
நித்திரையில் நீராடும் கற்பனையே!
நீண்ட இரவின் நெருங்கிய தோழியே!
வியக்க வைக்கும் காலையே!
மயக்க வைக்கும் மாலையே!
இதயத்தை இயங்க வைக்கும் இனிய கீதமே!
மழை பெய்த காலையின் மண் வாசனையே!
மன அமைதி பேணும் பசுமை பள்ளத்தாக்கே!
தேகத்தை குளிர்விக்கும் இனிய தென்றல் காற்றே!
சிறு புற்களிலும் சூரியனைக் காட்டும் பனித்துளியே!
பசிக்கும் குழந்தைகளின் அமுதசுரபியே!
தென்னை மரப் பூக்களில் வளரும் இளநீரே!
வின்னிலிருக்கின்றாயா
மண்ணிலிருக்கின்றாயா
எங்கே இருக்கிறாய் நீ