உன்னை சேரும் நாள்

உன்னை தேடி சென்றால்
பயணங்கள் முடிவதில்லை..
உன்னை நினைத்து கொண்டால்
நொடிகள் நகர்வதும் இல்லை..
வானும் , நிலவும்
சேர்ந்தால் அழகு..
என்னை நீ சேராமலே
ஏன் அவ்வளவு அழகு...
நதி கூட என்றோ ஒரு
நாள் கடல் சேரும்..
என் இதயமும்,காதலும்
என்றும் உன்னை சேரப்போவதில்லை..