புதைக்கப்பட்ட ஈழ சமூகம் - நாகூர் லெத்தீப்
ஓர் மனித
குலம் மண்ணோடு
மண்ணாக
புதைக்கப்பட்ட
கருப்பு சரித்திரம்........!
முள்ளிக்காடு
சுடுகாடாக மாற்றி
அமைக்க அரசாங்க
அசிங்க திட்டம்
அரங்கேறிய
கருப்பு நாள் அது........!
ஈழத்தமிழர்களின்
உணர்வுகள்
சிதைக்கப்பட்டு
அளிக்கப்பட்டது ஏன்.........!
ஆதி மனிதன்
அறியா தவறு
செய்தான் கொலையும்
செய்தான்........!
அறிந்து செய்யும்
இந்த கொலைகளுக்கு
என்ன காரணம்
உலகம் சொல்லுமோ........!
உலகம் இருளாக
மாற்ற மனித
பிணத்தை
குவிக்க நினைக்கும்
மதவெரிகளின்
வெறிச்செயல்
தொடருகிறதே.........!
சிங்கள மனிதன்
மரித்துவிட்டான்
ஈழத்தை துண்டாக
ஆகிவிட்டானே.........!
பூர்வீக நிலங்கள்
பறிக்கப்பட்டது
உயிரையும்
எடுத்துக்கொண்டது..........!
நீண்டநாள்
சாபம் ஏன்
ஏற்ப்பட்டது இந்த
மண்ணிலே..........!
சரித்திரம்
மறக்கப்படலாம்
ஊர் இனத்தின்
உதிரம் மரியா
எழுத்தாக
எழுதப்பட்டது
விதிக்கப்பட்டது
விதைக்கப்பட்டது..........!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
