கற்றவை பற்றவை

வற்றிய வண்ணத்தில்
நிழலான நிம்மதியை
நிமிடத்தில் தொலைத்து
சுற்றி சுற்றித்
தேடாதே சுகத்தை ..!

தோல்வியின் மிதிக்கே
மிரண்டுப் போனால்
தகர்க்கும் போது
தாங்குவது எப்படி ..?

இன்னலை எடுத்து
இமைமுன் வைத்து
தோலை உரித்து
தூக்கி வீசு ..!!

கைரேகைக் கனவுகள்
கண்முன் எரிந்தாலும்
முயற்சியுடன் முனைந்தால்
சாம்பலும் சாதிக்கும் ..!!

உன்னை உருவாக்கு
பலருக்கு உரித்தாக்கு ..!
உதட்டின் உச்சரிப்பில்
உலகம் உருவாகும் ..!!

மனிதம் கேட்டே
மடிந்துப் போகுமுன்
மின்னலில் மிதக்கும்
மின்மினியாய் இரு ..!

முயற்சியை முககவசமாக்கி
எரிமலை எண்ணத்துடன்
துயரத்தைத் துரத்தி
நகத்தால் நசுக்கும்
வீரனை விதை ...!

--- இராஜ்குமார்

===============================================================================================
போட்டிக் கவிதை
தன்னம்பிக்கை கவிதை - 6
===============================================================================================

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (12-Jul-14, 5:27 pm)
பார்வை : 111

மேலே