கற்றவை பற்றவை
சமத்துவ நெருப்பில்
சாதிகள் அழியச்
சபதம் ஏற்றுக்
கற்றவை பற்றவை !
ஊழல் பேயின்
உயிரைக் குடிக்கும்
உக்கிர நெருப்பெனக்
கற்றவை பற்றவை !
மதத்தின் பெயரால்
மக்களை அழிப்பவர்
மயக்கம் தெளியக்
கற்றவை பற்றவை !
உள்ளத் துயர்வே
உண்மை உயர்வென
ஓங்கி ஒலித்துக்
கற்றவை பற்றவை !
கைகளில் திறனும்
நெஞ்சினில் உரமும்
நெருப்பாய்க் கனலக்
கற்றவை பற்றவை !
இனியெமக் கிணையென
இருப்பவர் எவரெனும்
எண்ணம் வளர்ந்திடக்
கற்றவை பற்றவை !
இந்திய நாடொரு
வல்லர சாகிட
எது தடைஎன்றே
கற்றவை பற்றவை !
தடைபொடி படவே
கற்றவை பற்றவை !!