சுவாசத்தின் அலசல்

சுற்றும் முற்றும்
பார்த்து
சுழன்றடிக்கும் காற்று
சுகமாக ஏற்று சுதி ஏற்றும் நாற்று.!
நதிதனில் முகம்பார்த்து
முத்தமிடும் நிலவு
அதிகாலை கரைதொட்டு
போவது அழகு..!
கொத்து கொத்தாய் பூத்திருக்கும்
பனித்துளியாய்
முத்துமுத்தாய் வேர்த்திருக்கும்
முகவரியாய்
சூரியன் நுழைந்ததும்
காரியம் முடிந்ததும்.
தென்றலின் வரவினால்
பூக்கள் சிலிர்த்திடும்
வாசணைத்திரவினால்
வண்ணங்கள் சிதறிடும்
நறுமணமாய் நன்னிலம் மாறிடும்
கலர் கலராய் காவியம் பாடிடும்...
ஆரவாரம் விரும்பா புன்னகையாய்
காலநேரம்மாற்றும் பொன்நகையாய்
சூழ்நிலையால் சுயநலம்
சுலபமாய் சுழன்றிடும்
சுயரூபம் அறிந்துவிட்டால்
அது சுடரையும் சுருட்டிவிடும்..!

எழுதியவர் : c.k.வசீம்அன்வர் (13-Jul-14, 5:05 am)
பார்வை : 81

மேலே