கற்றதைப் பற்றவைபோட்டிக் கவிதை
[கனம்செய்! கனப்படு!]
1. உனது தாயையும்
2. உனது தந்தையையும்
3. கனம் பண்ணுவாயாக.
4. நன்றிபா ராட்டும்
5. நற்குணம் வளரும்;
6. பெரியோர் மதிக்கும்
7. பண்புகள் வளரும்;
8. கீழ்ப்படி யும்,மனம்
9. கேள்வி,கேட் காது;
10. இணக்கமாய் இருக்க
11. இதயம் துடிக்கும்;
12. வணக்கமும் பணிவும்
13. வளர்ந்திட உதவும்;
14. விட்டுக் கொடுப்பது
15. விளங்கும்; பிறர்மனம்
16. பட்டுப் போவதைப்
17. பார்த்திடல் தவிர்ப்போம்!
18. ஒத்துப் போவதால்
19. உறவுகள் வளரும்;
20. செத்துப் போகும்
21. வெறுப்பும் பகையும்;
22. சிந்தனை நேராம்;
23. செயல்முறை இனிப்பாம்;
24. சிறப்புகள் சேரும்!
25. தேவைகள், அறவழி
26. பிறழ்வது நீங்கும்!,
27. ஆவன வற்றால்,
28. அமைதி பெருகும்;
29. யாவரும் மகிழ,
30. யாதும் இன்பமே!
============================ =====

