ஊமை தேசம்

(என்னுள் இருந்து 'பெண்மை' பேசியது, தான் கற்றவை.. அதையே இங்கு சுடர்போல் பற்றவைகிறேன்)

உரக்கச் சிரித்தால்
பாஞ்சாலியின் பேர்த்தியாம்!
ஊமையாய் வாழ்ந்துவிட்டால்
ஊருக்கே உத்தமமாம்!!

கையில்லா ரவிக்கையும்,
உதட்டுச் சாயமும்,
வேசிமகள் வேசமாம்
குறிப்பெடுத்தான் காமுகன்!

படுதாவையும் பார்வையால்
விலக்கிப்பார்க்கும் காலமிது!
பட்டுப்பாவாடையும் பாலுணர்ச்சியை
தூண்டுகின்ற தூண்டிலாம்!!

கணினி காலமிது
கற்பினி வேண்டாமென்றான்
கர்ப்பிணிக்கும் விலக்கில்லை
பொசிக்கிவிடுகிறது காமத்தீ!

கற்சிலைகளாயின கடவுள்கள்
சந்தோஷம்! சந்தோஷம்!
கடத்தப்பட்டு விற்றாலும்
கற்புள்ள கற்களே!!

பட்டங்கள் ஆளப்பிறந்தவள்
பட்டுப்போக விடாதீர்கள்...
சட்டங்கள் செய்யப்போகிறவள்
சல்லடைக்கண்களை மூடிக்கொள்ளுங்கள்...

கருவறையைக் கழிப்பறையாக்கும்
கருவேலமரங்களின் மத்தியில்
நன்மானிடர் கோடி
வாய்மூடியே வாழ்ந்தால்
மாயிடர் தாங்கியே
மாதர்குலம் வாடுமடா!

எழுதியவர் : வைரன் (13-Jul-14, 11:28 am)
பார்வை : 1526

மேலே