சமாளிச்சுக்குவேன்

ஆசிரியர்: இடுக்கண் வருங்கால் நகுகன்னு அய்யன் திருவள்ளுவர் சொல்லிருக்காரு. இடுக்கண் -ன்னு சொன்னா என்ன அர்த்தம். கடைசி பெஞ்சிலே உக்காந்திட்டு கொட்டாவி விடறவன் யாருடா.
மாணவன்: சார் அது குமரேசன் சார்.
ஆசிரியர்: டேய் குமரேசா இடுக்கண்ன்னா என்னடா அர்த்தம்?
குமரேசன்: துன்பம்ன்னு அர்த்தம் சார்.
ஆசிரியர்: தூக்கக் கலக்கத்லே இருந்தாலும் நீ சொன்ன பதில் சரி தான். சரி உனக்கு இடுக்கண் வந்தால் என்ன செய்வே
குமரேசன்: சார் நான் என் காதிலே கடுக்கண் இருக்கில்ல அத வித்து சமாளிச்சுக்குவேன் சார்.
ஆசிரியர்: நீ தூங்கு முஞ்சியா இருந்தாலும் மகா புத்திசாலிடா