மூஞ்சியிலே தான் வீசி அடிப்பேன்

ஏம்மா பழைய இட்லி இருக்கு. தரட்டுமா?

நீ அதைத் தந்தா உன் மூஞ்சியிலே தான் வீசி அடிப்பேன். என்ன, பிச்சக்காரங்கன்னா அவ்வளவு கேவலமாப் போச்சா? நான் ”அம்மா, தாயே பழசு ஏதாவது இருந்தா போடுங்கன்னு கேட்டனா?”
நீ சுடச்சுட இட்லி மூணுவகைச் சட்னியோட தந்தாலும் வாங்க மாட்டேன். அஞ்சு ரூபா போட முடிஞ்சா போடு. இல்லனா வாயை மூடிட்டு போ.





(சென்னையில் 1973 ஆம் ஆண்டு ஒரு பெரிய பச்சை வாழைப் பழத்தின் விலை 10 பைசா. பனகல் பார்க் அருகே ஒரு பிச்சைகாரிக்கு 10 பைசா கொடுத்தேன். அவள் சண்டைக்கு வந்து விட்டாள். 25 பைசா கேட்டாள். “உனக்கு காசு தந்தது தப்பு. நான் தந்திருக்கக் கூடாது” என்றேன். அவள் அந்த 10 பைசாவை எடுத்து “ இந்தா நீயே வச்சுக்கா “ என்று என்னிடம் நீட்டினாள். நான் ஒன்றும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். 1973-ல் நான் முதுகலை முதலாண்டு மாணவன்.)

எழுதியவர் : மலர் (13-Jul-14, 2:35 pm)
பார்வை : 238

மேலே